நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உலக முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று (டிசம்பர் 12) குமரி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நாகர்கோவில் அடுத்த சின்னராசிங்கன் தெருவில் வைத்து மாவட்ட தலைவர் ரஜினி தங்கம் தலைமையில், அரசியல் விமர்சகர் ரவிந்தரன் துரைசாமி முன்னிலையில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் மாநகர தலைவர் ரஜினி செல்வம் உள்பட ஏராளமான ரசிகர்கள் உடனிருந்தனர்.