கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஆராச்சர் நிலத்தை மீட்டு இந்துக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்து தமிழர் கட்சி மாநில செயலாளர் ஈசான சிவம் குமரி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப். 20) காலை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காட்சி அளித்தது.