கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மெர்லியண்ட் தாஸ் தலைமையில் நடைபெற்றது. குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்; மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழாவிற்கு சிறப்பு பேருந்தை இலவசமாக விட வேண்டும் உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் செயலாளர் லீமா ரோஸ், துணைத்தலைவர் சிவகுமார், கவுன்சிலர்கள் ஜான்சிலின் விஜிலா, நீலபெருமாள், அம்பிலி, செலின் மேரி, பரமேஸ்வரன், லூயிஸ், ராஜேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.