கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மணிமேடை அருகே அலெக்சாண்டிரா பிரஸ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக வடசேரி போலீசாருக்கு நேற்று (செப்.,21) தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்தவகையில் 268 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவற்றை விற்பனை செய்த மேல புத்தேரியை சேர்ந்த அன்பழகன் (43) மற்றும் செந்தூரான் நகரை சேர்ந்த ஆனந்தன கண்ணன் (39) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதே போலராமபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் (48) என்பவரிடம் இருந்து 25 பாக்கெட்டுகளும், பொதுப்பணித் துறை அலுவலக சாலையை சேர்ந்த ஜாண் (54) என்பவரிடம் இருந்து 10 பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களும் கைது செய் யப்பட்டனர்.