ஆஸ்திரேலியா: வூராபிண்டாவில் சிறுவர்கள் பாம்பை வைத்து ஸ்கிப்பிங் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிறுவர்கள் குழு ஒன்று இறந்த மலைப்பாம்பை கயிறாகப் பயன்படுத்தி ஸ்கிப்பிங் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதை ஒரு பெரியவர் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இணையத்தில் இந்த வீடியோ வைரல் ஆனாலும், பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.