குமரி மாவட்டத்தில் வாழை விவசாயிகள் கேரளாவின் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்யும் வகையில் வாழைப் பயிர்கள் நடவு செய்வது வழக்கம். இதில் நேந்திரம், ரசகதலி வாழை வகைகளை அதிக நடவு செய்வார்கள். வாழை வயல்களில் இருந்து நேரடியாகவே விவசாயிடமிருந்து கேரளாவியாபாரிகள் கொள்முதல் செய்வது வழக்கம். கடந்த மாதத்தில் நேந்திரம் வாழைப்பழங்கள் குறிப்பிட்ட அளவுக்கு விலை போயின. குறிப்பாக கிலோவுக்கு ரூபாய் 60 வரை கொள்முதல் செய்யப்பட்டது.
பழக்கடைகளில் நேந்திரம் வாழைப்பழங்கள் ரூ 70 வரை விற்பனை ஆனது. சந்தைகளிலும் ரூ. 55 க்கு மேல் விவசாயிகள் இடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இரண்டு வாரங்களாக நேந்திரன் வாழை குலை விலை சரிவடைந்துள்ளது.
குறிப்பாக ஓணம் சந்தையை எதிர்பார்த்து வாழைக் குலைகளை அறுவடை செய்த விவசாயிகளின் எதிர்பார்ப்பு வீணாகும் வகையில் விலை சரிவடைந்துள்ளது. காரணம் கேரளாவில் தொடர் மழையால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கேரளா அரசு விழாவான ஓணம் விழாவை இந்த முறை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கேரளாவுக்கு ஏற்றுமதி ஆக வேண்டிய நேந்திரம் வாழைக் குலை தள்குறிப்பிட்ட அளவு ஏற்றுமதியாகாததால் இந்த முறை ஓணம் சந்தை மந்தமாகிவிட்டது. இதனால் நேந்திரம் வாழை விவசாயிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.