இ. எஸ். ஐ மருத்துவமனை பணிகளை உடனடியாக தொடங்க அமைச்சரிடம் மனு

55பார்த்தது
இ. எஸ். ஐ மருத்துவமனை பணிகளை உடனடியாக தொடங்க அமைச்சரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 200 படுக்கை வச திகளுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவ தற்கு 2013 ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அதன் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக இந்த பணிகள் ஆரம் பிக்க படாமல் உள்ளது

    இந்நிலையில் ஒன் றிய தொழிலாளர் நலன் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை சந்தித்த விஜய் வசந்த எம் பி பணி களை உடனே தொடங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார் இது தொடர்பான மனுவில், -  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளன ஆனால் கன்னி யாகுமரி மாவட்டத்தில் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க கூடிய ஒரு இ. எஸ் ஐ மருத்துவ மனை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.

தொழிலாளர்களுக்கான ஒரு பல்நோக்கு மருத்துவமனை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு மிகவும் பல னுள்ளதாக அமையும்

இந்த மருத்துவமனை அமைப்பதற்கு போதிய
நிலம் இல்லாதது தாமதத் திற்குகாரணமாகஉள்ளது ஆகவே அரசு சுண்னியாகு மரிமாவட்டத்தில் போதிய நிலம் தேர்வு செய்து ஒப்பு தல் அளிக்க குழு ஒன்றினை நியமனம் செய்ய வேண்டு மெள கேட்டுகொள் கிறேன்.

அதற்கு பின் கூடிய விரைவில் மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ள வேண்டுமென  கேட்டுகொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி