குழித்துறையில் சவுக்கு சங்கர் ஆவேச பேட்டி

61பார்த்தது
தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல்நிலைய பெண் ஆய்வாளர் சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  
        இந்த வழக்கு விசாரணை குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி மோசஸஸ் ஜெபசிங் என்பவர்  முன்னிலையில் நடைபெற்றது.
      அப்போது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் ஜாமின் வழங்கபட்டு உள்ளதை சுட்டிக்காட்டி
சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வதாடியதை தொடர்ந்து நீதிபதி மோசஸஸ் ஜெபசிங் பல்வேறு நிபந்தனைகளுடன் சொந்த ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.
      இதனையடுத்து போலீசார் சவுக்கு சங்கரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அப்போது நீதிமன்றத்தில் செல்லும் போதும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த போதும் செய்தியாளர்களை பார்த்ததும் பேட்டியளித்த சவுக்கு சங்கர், - அடுத்த அடுத்த வழக்குகளில் 
மீண்டும் மீண்டும் என்னை கைது செய்ய முயர்ச்சி நடக்கிறது.   திமுக அரசு என்னை பார்த்து அஞ்சுகிறது. உதயநிதி என்னை கண்டு அஞ்சுகிறார். இதன் காரணமாக தான் என் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஆவேசமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி