உன்னங்குளம் பராசக்தி அம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்

63பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற குருந்தன்கோட்டை அடுத்துள்ள உன்னங்குளம் பராசக்தி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதையொட்டி அலங்கார தீபாராதனை, மகாலட்சுமி பூஜை, அதனை தொடர்ந்து மிர்த்திஞ்ஜெய ஹோமம், சுகுர்த ஹோமம், களபபூஜை, குங்கும கலசபூஜையும், அம்மனுக்கு களப அபிஷேகம், குங்கும அபிஹேகமும், உச்சகாலபூஜை, பகவதி பூஜை, ஐஸ்வர்ய பூஜை ஆகியவை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலம் மாலையில் நடைபெற்றது. உன்னங்குளம் இசக்கி அம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலத்தை ஊர்த்தலைவர் மனோகரன் துவக்கி வைத்தார். பால்குடத்துடன் ஊர்வலமாக வந்த சிறுமிகள், மற்றும் பெண்கள் ஏராளமானோர் ஊர்வலமாக பராசக்தி அம்மன் சன்னதியை அடைந்தனர். அங்கு பராசக்தி அம்மன் உற்சவருக்கு பால்குடி ஊர்வலத்தில் நேர்த்திகடனாக கொண்டு செல்லப்பட்ட பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி