குமரியில் சூறைகாற்று 2 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

51பார்த்தது
தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில், 29. 08. 2024 முதல் 31. 08. 2024 வரை மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கி. மீ. வேகத்திலும், கேரளா-கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி. மீ, வேகத்திலும் இடையிடையே 55 கி. மீ. வேகத்திலும் வீசக்கூடும் என அறிவிப்பு வெளியானது.


எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இப்பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா அறிக்கை விடுத்திருந்தார்.இதனால் இன்று (ஆக.,30) குமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும், 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று காலை முதல் சூறைக் காற்று வீசி வருவதுடன் ராட்சத அலைகளும் எழும்பி வருகின்றன.

மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. கட்டுமரங்கள், வள்ளங்கள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தேங்காபட்டணம், சின்ன முட்டம், குளச்சல் துறை முகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி