நித்திரவிளை அருகே பெண்ணைத் தாக்கியதாக வாலிபர் கைது

57பார்த்தது
நித்திரவிளை அருகே பெண்ணைத் தாக்கியதாக வாலிபர் கைது
நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் கில்பர்ட். மீன்பிடி தொழிலாளி. இவருக்கு நியூஸ்பை (38) என்ற மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

      நியூஸ்பை தங்கையை  அதே பகுதி எருக்கல்விளாகம் என்ற இடத்தை சேர்ந்த மில்ரோஜன் (35) என்பவர் திருமணம் செய்த போது, வரதட்சணை பணம் கொடுப்பது குறித்து கில்பர்ட்  பொறுப்பு எற்றிருந்தார். ஆனால் இதுவரை வரதட்சனை பணம் கொடுக்கவில்லை.

        இதனால் மில்ரோஜனுக்கும் கில்பர்ட்டிற்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கில்பர்ட் மீன்பிடி தொழிலுக்கு சென்றிருந்த நேரத்தில் சம்பவ தினம் இரவு கில்பர்ட் வீட்டிற்கு சென்ற மில்ரோஜன் வீட்டுக்குள் அத்து மீறி  நுழைந்து நியூஸ்பையை அவதூராக பேசி தாக்கியுள்ளார்.

      இதில் காயமடைந்த நியூஸ் பை குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து மில்ரோஜனை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி