பெண்கள் விடுதி கழிப்பறையில் ரகசிய கேமரா

69பார்த்தது
பெண்கள் விடுதி கழிப்பறையில் ரகசிய கேமரா
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ரகசிய கேமரா பொருத்திய நான்காம் ஆண்டு மாணவரான விஜய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது லேப்டாப்பில் 300 வீடியோக்கள் இருந்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி