வடக்கு பாகிஸ்தானில் பெய்துவரும் தொடர் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் உள்ள மைதான் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.