ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஃபானி குமார் என்ற இளைஞர், முடி கொட்டும் என தலைக்கவசத்தை அணிய மறுப்பவர்கள் கூறும் காரணங்களுக்கு தீர்வளிக்கும் விதமாக, சோல்டர் சப்போட்டுடன் கூடிய தலைக்கவசத்தை உருவாக்கியுள்ளார். இக்கண்டுபிடிப்பு குறித்து கூறிய அவர், "தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. காப்புரிமைக்குப் பிறகு இந்த தலைக்கவசம் குறைந்த விலையில் வழங்கப்படும். இன்னும் 3 மாதங்களில் சந்தைக்கு கொண்டு வரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.