கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஏடிஎம் மையத்துக்குச் சென்று உங்களுக்குத் தேவையான பணத்தை ஒதுக்கப்பட்ட வரம்பிற்குள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு வங்கியிடமோ அல்லது வேறு எந்த சிறப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால், நீங்கள் கிரெடிட் கார்டு ரொக்க அட்வான்ஸ் கட்டணம் என்ற கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இது வழக்கமான ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணத்தை விட மிக அதிகமாக இருக்கும்.