ஒரு பெண்ணின் சம்மதமின்றி கேமராவில் அவரை புகைப்படம்/வீடியோ எடுப்பதும், அதை வேறு ஒருவருடன் பகிர்வதும் குற்றமாகும். அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67ஏ, 66E மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 354C-ன் படி வழக்கு பதிவு செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். 2016ல் சைபர் க்ரைம் குற்றங்களில் கைதான 11,000 பேரில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ரகசிய கேமரா வைத்திருந்தவர்கள் தான்.