கேரளாவில் இருந்து மீன் கழிவு ஏற்றி வந்த வாகனத்திற்கு அபராதம்

68பார்த்தது
நித்திரவிளை போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே மீன் ஏற்றிக் கொண்டு செல்லும் வாகனம் ஒன்று வந்துள்ளது. வாகனம்  போலீசார் கடந்து சென்ற போது, துர்நாற்றம் வீசியதால்,   சந்தேகமடைந்த போலீசார் பின்னால் துரத்தி சென்று கணவதியான்கடவு பாலம் பகுதியில் வைத்து வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.

      அப்போது கேரளாவில் மீன் விற்பனை செய்துவிட்டு, மீனின் கழிவு பொருட்களை ஏற்றி வந்தது தெரிய வந்தது. இவற்றை தூத்துக்குடி பகுதியில் கொண்டு செல்வதாக கூறினார்கள்.

      வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்ட பகுதி வாவறை ஊராட்சி பகுதியானதால் போலீசார் மீன்கள் ஏற்றி வந்த வாகனம் குறித்து சம்மந்தபட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த ஊராட்சித் தலைவர் மெட்டில்டா என்பவர்  மீன் கழிவுகளை  ஏற்றி வந்த வாகனத்திற்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்து வாகனத்தை விடுவித்தார்

தொடர்புடைய செய்தி