கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தலின்படி மகளிர் திட்டம் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து கிள்ளியூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கலை அறிவில் கல்லூரி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மகளிர் திட்ட இயக்குனர் பீபீ ஜான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகளின் பேரணி, துண்டு பிரசுரங்கள் ஆகியவை விநியோகம் செய்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மேலும் அனைவரும் தவறாது வாக்கு அளிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.