குறண்டி கோரக்க நாதர் கோவிலில் பூஜையுடன் தொடங்கிய திருப்பணி.

76பார்த்தது
குறண்டி கோரக்க நாதர் கோவிலில் பூஜையுடன் தொடங்கிய திருப்பணி.
குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன. இதில் உள்ள சிறு கோவில்களில் திருப்பணி நடத்தி கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் சுசீந்திரம் தேரூர் அருகே உள்ள குறண்டி கோரக்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த உபயதாரர்கள் மூலம் ரூ. 40 லட்சம் செலவில் திருப்பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. இந்த நிலையில் கோவிலில் கல் நிலை விடும் பணி நேற்று நடந்தது. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் திருப்பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், மராமத்து பொறியாளர் ராஜ்குமார், கோவில் ஸ்ரீ காரியம் கண்ணன், நன்கொடையாளர் கோவையை சேர்ந்த முன்னாள் வான்வெளி விஞ்ஞானி ஜெயபிரபு மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி