பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்தால் பப்பாளி இலையைச் சாறு எடுத்து பருகும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. அதேபோல மாதுளம்பழம், கீரை, முட்டைக்கோஸ், பிரக்கோலி போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதும், பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். பீட்ரூட்டில் இருக்கும் இரும்பு மற்றும் போலேட் ரத்த சிகப்பு அணுக்கள் மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும். பூசணிக்காய், கேரட், கிவி, ஸ்ட்ராபெரி, அன்னாசி போன்ற உணவுகளும் சாப்பிடலாம்.