தேனை விட தேனடை மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது. தேன்கூட்டில் செறிந்து கிடக்கும் புரதங்கள், தாதுக்கள், நீர், மகரந்தம் என்சைம்கள் ஆகியவை அடங்கியுள்ளன. இதை உண்ணும் பொழுது மனித உடல் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடும் வலிமையை பெறுகிறது. பழங்கால மருத்துவத்தில் தும்மல், சளி, கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு தேனடையை மென்று சாப்பிட பரிந்துரைப்பது வழக்கம். மருத்துவ குணங்கள் மிக்கதாக கருதப்படும் தேனடை கிடைத்தால் வாங்கி சாப்பிட மறக்காதீர்கள்.