ஆரல்வாய்மொழியில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு கூட்டம்

85பார்த்தது
ஆரல்வாய்மொழியில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி குமரி மாவட்ட நிர்வாக குழு கூட்டம் ஆரல்வாய்மொழியில் நேற்று (பிப்.2) நடைபெற்றது. இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் ராஜு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் பூதப்பாண்டி பகுதியில் நடைபெற்ற நூற்றாண்டு நடைபயணம், கிளைகள், தாலுகா, மாவட்ட மாநாடு நடத்துவது, மேற்கு மாவட்டத்தில் நூற்றாண்டு விழா வாகன பிரசார பயணம் நடத்துவது உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது. 

இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் அருள்குமார், கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் கூட்டத்தில் 4 வழி சாலையில் அதிகமான விபத்துகள் ஏற்பட்டு உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே தேவசகாயம் மவுண்ட் பகுதியிலும், வெள்ளமடத்திலும், குலசேகரன்புதூர் பகுதியைக் கடக்கும் பகுதிகளிலும் மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி