தேனி மாவட்டம் பளியன்குடி கிராமத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமியன்று மங்கல தேவி கண்ணகி விழா, பூமாரி விழா எனும் முப்பெரும் விழா நடைபெறும். வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழக, கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த கோயிலானது திறக்கப்படும்.