காங், இ.கம்யூ தொடர்ந்து டி.எம்.சி-க்கு நோட்டீஸ்

65பார்த்தது
காங், இ.கம்யூ தொடர்ந்து டி.எம்.சி-க்கு நோட்டீஸ்
காங்கிரஸ் கட்சி ரூ.1,823.08 கோடி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது பழைய பான் கார்டை பயன்படுத்தியதற்காக ரூ.11 கோடி நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 72 மணி நேரத்தில் 11 நோட்டிஸ்களை அனுப்பியுள்ளதாக அக்கட்சியின் எம்.பி சாகேத் கோகலே தெரிவித்துள்ளார். மேலும் இமெயில் மூலம் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை அவர் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி