உத்திரமேரூர் - Uthiramerur

செங்கல்பட்டில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சிறை கைதிகள் - வழக்கறிஞர்கள் சந்திப்பு தொடர்பாக டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை திரும்ப பெறக் கோரி செங்கல்பட்டில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சிறைகளில் கைதிகளை சந்தித்து பேசும் வழக்கறிஞர்களில் சிலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக உள்ளதால் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர்களை மட்டும் இனி கைதிகளை சிறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் காவல்துறை அதிகாரிகளுக்கு சமீபத்தில் சுற்றிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், சில வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலை தவறாகப் பயன்படுத்துவதாகவும், குற்றவாளிகளுடன் நெருங்கிய உறவு ஏற்படுத்திக் கொள்ளுதல், கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை வழங்குதல், போலியான ஆவணங்கள் தயாரித்தல், கட்டப்பஞ்சாயத்து செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாகவும் டிஜிபி கூறியிருந்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து இந்த சுற்றறிக்கையை திரும்ப பெறக் கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా