ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டின் மீது திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது அறிக்கையில், அடக்குமுறைக்கு அஞ்சாமல், அடிபணியாமல், உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர பெரும்போர் புரியும் அறப்போர் இயக்கத்திற்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.