வறுத்த எறும்புகளுடன் பானிபூரி தயார்..! (வீடியோ)

76பார்த்தது
தாய்லாந்தை சேர்ந்த சமையல் கலைஞர்கள் பானிபூரியில் சுவையை கூடுதலாக்க வறுத்த எறும்புகளை சேர்த்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாங்காக்கில் உள்ள பிரபல உணவு விடுதியில் இந்த எறும்பு பானிபூரி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பானிபூரிக்கான சிவப்பு எறும்புகளை அவர்கள், சத்தீஸ்கரில் இருந்து வரவழைப்பதாக கூறி உள்ளனர். தாய்லாந்து உணவுப் பிரியர்களிடம் இந்த எறும்பு பானிபூரிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி