"எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் அனுபவம் எனக்கு கிடையாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவரின் அந்த அனுபவம் எனக்கு தேவையும் கிடையாது. அவரின் கூவத்தூர் அனுபவத்தை ஒட்டுமொத்த உலகமுமே நேரலையில் பார்த்தது. அவரை போல டேபிள், சேருக்கு இடையில் தவழ்ந்து சென்று யாரின் காலையும் நான் பிடிக்கவில்லை" என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உதயநிதியின் வயதைவிட எனக்கு அனுபவம் அதிகம் என இபிஎஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.