உத்திரமேரூரில் தனியார் மருத்துவமனை அமைச்சர் திறந்து வைத்தார்

56பார்த்தது
உத்திரமேரூரில் தனியாருக்கு சொந்தமான 24 மணி நேர மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பருத்திகொள்ளை என்னுமிடத்தில் தனியாருக்கு சொந்தமான ரபேல் மல்டி ஸ்பெஷாலிட்டி 24 மணி நேர மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது, இதில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பார்வையிட்டு வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த மருத்துவமனையை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் அவர் வராததால் அமைச்சர் செஞ்சி மாஸ்தான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி