சென்னை படூர் அருகே இயங்கி வரும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சஞ்சு ராஜ் என்பவர், அக்கல்லூரியில் பணியாற்றி வரும் பெண் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண், நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த கல்லூரி மாணவர்கள், பேராசிரியரிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, அவரை சரமாரியாக தாக்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது பேராசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.