இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. இளைஞர்கள் சிலர் சாலையில் சென்ற வாகனங்கள் மீது தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்களை எறிந்து விளையாடினர். அப்போது அந்த வழியே வந்த ஆட்டோ ஒன்றில் இளைஞர் ஒருவர் தண்ணீர் நிரப்பப்பட்ட பலூனை எறிந்தார். இதில் சற்றும் எதிர்பாராத விதமாக அந்த ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் இரண்டு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.