காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வத்திற்கு வாக்கு சேகரிப்பு.

77பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆனம்பாக்கம் ஊராட்சியில் திமுக கட்சி சார்பில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ வழிகாட்டுதலின்படி, சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் திமுகவினர் ஏராளமானோர் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் அவர்களை ஆதரித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டு கொண்டனர்‌.

அப்போது, அந்த கிராம பெரியவர்களுடன் சாலவாக்கம் திமுக ஒன்றிய செயலாளர் குமார் உட்கார்ந்து திமுக அரசு செய்த நலத் திட்டங்கள் தெரிவித்து துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இதில், ஆனம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோமளா ஐயப்பன், முன்னாள் ஊராட்சி செயலாளர் பொன்சங்கர், ஆனம்பாக்கம் கிளை செயலாளர்கள், பொன்அரி, வீரமணி, முருகன், பாலாஜி, கிளை பொருளாளர் சிவகுமார், இளைஞர் அணி, தாமோதரன், அமராவதிபட்டினம் இளைஞரணி செயலாளர் எஸ். மணிகண்டன், சிறுமைலூர் வெங்கடசுப்பிரமணியம், வரதன், சித்தாலப்பாக்கம் பூபாலன், பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் திருமுக்கூடல் மு. சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெயபுரி, அஜய் ஸ்ரீநாத், கன்னியப்பன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி