திடீரென பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து

54பார்த்தது
திடீரென பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து
கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் - மதுக்கரை சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து இன்று (மே 19) பள்ளத்தில் சிக்கியது. சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பிறகு அது மூடப்பட்டது. இந்த நிலையில், நேற்று (மே 18) பெய்த கனமழை காரணமாக மண் ஊறியிருந்ததால், திடீரென அங்கு பள்ளம் ஏற்பட்டது. இதில், அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்து சிக்கியது. பின்னர், பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலமாக பேருந்து மீட்கப்பட்டது.