மாமனார் மாமியாரை விரட்டிய மருமகள் - நடுத்தெருவில் தம்பதி

68பார்த்தது
புதுச்சேரி மாநிலம் கலிதீர்த்தால் குப்பத்தைச் சேர்ந்த நாராயணன் (77) வதிஸ்டா (70) தம்பதியை அவர்களது மருமகள் மகேஸ்வரி வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறி கொடுமை படுத்தியதாக தெரிகிறது. வீடு வதிஸ்டாவின் பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்களது மகன் வாய் திறக்காமல் இருந்த நிலையில் வயதான தம்பதி இன்று (மே 19) ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு விசாரித்த ஆட்சியரும் அவர்களுக்கு வீடு கிடையாது என கூறியுள்ளார். இதனால், விரக்தியடைந்த வயதான தம்பதி கண்ணீர் மல்க நடுத்தெருவில் நிற்கின்றனர்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி