சாலைகளில் விரிசல் - வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

81பார்த்தது
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று (மே 19) கேரள மாநிலம் வயநாடு செல்லும் கைதொல்லி சாலையின் ஓரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 அடி நீளத்திற்கு தடுப்போடு சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இருப்பினும் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு நெடுஞ்சாலைத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி