கடற்கரையில் ஜெல்லி மீன்கள் - கடலில் குளிக்க தடை

50பார்த்தது
கடற்கரையில் ஜெல்லி மீன்கள் - கடலில் குளிக்க தடை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் குளிக்க இன்று (மே 19) தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் அதிக அளவு கரை ஒதுங்குவதால் பக்தர்கள் கடலில் குளிக்கத் தடை விதித்து போலீசார் உத்தரவிட்டனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதால், கடலில் கால் மட்டும் நனைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெல்லி மீன்கள் உடலில் பட்டால் அலர்ஜி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி