துப்புரவு பணியாளர்கள் கவுரவிப்பு

82பார்த்தது
துப்புரவு பணியாளர்கள் கவுரவிப்பு
வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில் 70 பேர் துப்புரவு பணியாளர்களாக உள்ளனர். பொது இடங்களில் சுத்தம் செய்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் மேற்கொள்ளுதல், குப்பை தரம் பிரித்தல், மட்கும் குப்பையை கொண்டு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.

இப்பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், வாலாஜாபாத் பேரூராட்சி, 4வது வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் ஏற்பாட்டில் துப்பரவு பணியாளர்களுக்கான கவுரவிப்பு விழா நேற்று நடந்தது.

வாலாஜாபாத் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், 70 துப்புரவு பணியாளர்களுக்கும் விருந்து மற்றும் புத்தாடை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி