பாரதிய ஜனதா கட்சியின் மாநில சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் வேலூரில் இப்ராகிம் கடந்த சில தினங்களாகவே இந்து கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு சென்று பாரத பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்று வழிபாடு செய்து வருகிறார்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து கௌரவித்தனர்.