சம்பா முன் பருவ தொழில்நுட்ப பயிற்சி

80பார்த்தது
சம்பா முன் பருவ தொழில்நுட்ப பயிற்சி
மதுராந்தகம் அருகே வீராணக்குன்னம் கிராமத்தில், நேற்று அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்2024- - 25ன் கீழ், கிராம வேளாண் முன்னேற்ற குழுவிற்கு, 'அட்மா' திட்டத்தின் வாயிலாக, சம்பா முன் பருவத் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. சம்பா தொழில்நுட்பங்கள் பற்றி, மதுராந்தகம் வேளாண்மை உதவி இயக்குனர் ஷீலா விளக்கினார்.

வேளாண் துறை திட்டங்கள் பற்றி, துணை வேளாண் அலுவலர் பெருமாள், உதவி வேளாண்மை அலுவலர் அகஸ்தியா ஆகியோர் விளக்கினர். இந்நிகழ்வில், வீராணக்குன்னம் பகுதியைச் சேர்ந்த, 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள்பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி