செங்கல்பட்டில் வாலிபர் டூப்பீட்டு தற்கொலை போலீசார் விசாரணை

62பார்த்தது
தற்போதைய டிஜிட்டல் உலகில், ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை எளிதாக நடக்கிறது. மேலும், கடன் பெறும் வசதியும் சுலபமாகிவிட்டது அதேநேரத்தில், முகநூல் போன்ற செயலிகளில் பதிவிடப்படும் தனியார் கடன் செயலிகளால் அப்பாவிகளிடம் பணம் பறிப்பது அதிகரித்து வருகிறதுஅந்த வகையில்.


செங்கல்பட்டில் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய நபருக்கு கடன் செயலி தரப்பில் அதிக அழுத்தம் அளித்ததாக கூறப்படும் நிலையில், அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

செங்கல்பட்டு அடுத்த அனுமந்த புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் வயது (27) இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது ஆறு மாத கைக்குழந்தை உள்ளது


இந்த நிலையில் யுவராஜ் செங்கல்பட்டு பகுதியில் உள்ள இருசக்கர வாகன சர்வீஸ் சென்டரில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது

அப்போது பண தேவைக்காக ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார் கடனை திருப்பி கட்ட கூறி யுவராஜுக்கு ஆன்லைன் செயலி மூலம் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது இதனால் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் அவரது வீட்டில் சென்று புடவையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி