சகதியாக மாறிய நடைபாதை 'பேவர் பிளாக்' அமைக்கப்படுமா?

85பார்த்தது
சகதியாக மாறிய நடைபாதை 'பேவர் பிளாக்' அமைக்கப்படுமா?
சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகரில் இருந்து, செவிலிமேடு மும்முனை சாலை சந்திப்பு வரையுள்ள புறவழிச் சாலையான மிலிட்டரி சாலை, 7 கி. மீ. , நீளமும், 6 மீட்டர் அகலமும் உடையது.

கனரக வாகன போக்குரவத்து அதிகம் உள்ள இந்த சாலையில், அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை - கன்னியாகுமாரி தொழிற்தட திட்டத்தின் கீழ், 11 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்க பணி நடக்கிறது.

இந்நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையோரம் உள்ள நடைபாதைக்கு, ‛பேவர்பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், செவிலிமேடில் ‛பேவர்பிளாக்' நடைபாதை அமைக்காமல் விடுபட்ட இடங்களில் மண் சாலையாக உள்ளதால், லேசான மழைக்கே சகதியாக மாறிவிடுகிறது.

இதனால், சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள் மட்டுமின்றி, இருசக்கர வாகன ஓட்டிகள் சகதியில் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, செவிலிமேடில் நடைபாதை விடுபட்ட இடங்களில், ‛பேவர் பிளாக்' கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளர்.

தொடர்புடைய செய்தி