வண்டலுாரில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில், நேரடியாக நியமிக்கப்பட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர்களுக்கு, ஓராண்டு அடிப்படை பயிற்சிக்கான துவக்கவிழா, நேற்று முன்தினம் நடந்தது.
இதில், ஏழு பெண்கள் உள்ளிட்ட 22 போலீஸ் துணை கண்காணிப்பாளர்கள் பங்கேற்று, பயிற்சி பெற உள்ளனர்.
பயிற்சியின் துவக்க விழாவில், டி. ஜி. பி. , சங்கர் ஜிவால் பங்கேற்று, பயிற்சியை துவக்கி வைத்தார். போலீஸ் பயிற்சி நிலைய கூடுதல் பொறுப்பு இயக்குனர் சந்தீப்ராய் ரத்தோட், பயிற்சியகத்தில் உள்ள வசதிகள் மற்றும் புதிதாக துவங்கப்பட்ட பயிற்சிகள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில், சந்தீப்ராய் ரத்தோட் பேசியதாவது:
புதிதாக தேர்வாகி, துணை கண்காணிப்பாளர் களாக பயிற்சி பெறுவோருக்காக, நாவீன பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில், சட்டம், அறிவியல் சார்ந்த விசாரணை, நவீன கணினிமயமாக்கப்பட்ட கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, உளவுத்துறை, சமூக காவல், தலைமை தகவல் தொடர்பு திறன், சைபர் கிரைம், விசாரணை மற்றும் செயல்பாடுகள் போன்றவை இடம்பெறுகின்றன.