வாகனம் மோதி உடைந்த மின்கம்பம் வாகன ஓட்டிகள் அச்சம்

83பார்த்தது
வாகனம் மோதி உடைந்த மின்கம்பம் வாகன ஓட்டிகள் அச்சம்
வண்டலுார் -- வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார்- - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலைகளுக்கு இடையே ஒரகடம் மேம்பாலம் உள்ளது.
பிரதான தொழிற்சாலை பகுதியாக உள்ள ஒரகடம் சந்திப்பில் உள்ள மேம் பாலம் வழியே வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையையும், மேம்பாலத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையும் செல்கிறது.
இந்த நிலையில், மேம்பாலத்தின் மீதுள்ள மின் கம்பம் 6 மாதங்களுக்கு முன் கனரக வாகனம் மோதியதில், உடைந்து, சர்வீஸ் சாலையில் விழுந்துள்ளது. இதனால் ஒரகடம் சந்திப்பில் இருந்து, வாலாஜாபாத் செல்லும் வாகன ஓட்டிகள், மின் கம்பம் விழுந்து விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.


உடைந்த மின் கம்பத்தை அகற்றி, மேம்பாலத்தில் புதிய மின் கம்பம் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி