மின்விளக்கு எரியும் கம்பமா விளம்பர தட்டி வைக்கும் இடமா?

76பார்த்தது
மின்விளக்கு எரியும் கம்பமா விளம்பர தட்டி வைக்கும் இடமா?
செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில், கடவு எண் - 29 பொன்னேரிக்கரையில், 50 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, வாகன போக்குவரத்து பயன்பாட்டிற்கு உள்ளது.

இந்த பாலத்தின் நடுவே, வாகன ஓட்டிகளுக்கு சவுகரியமாக மின் கம்பங்கள் பொருத்தப்பட்டு, கம்பங்கள் வாயிலாக மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மின் கம்பங்களில், சிறிய அளவிலான விளம்பர பிளாஸ்டிக் தட்டிகளை கட்டி உள்ளனர். இந்த பிளாஸ்டிக் தட்டிகள் காற்று அடித்தால், மின் கம்பத்தில் இருந்து விலகி காற்றில் பறக்கிறது.

இந்த விளம்பர தட்டிகள் அறுந்து விழுந்தால், மேம்பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் முகத்தை பதம் பார்க்கும் அபாயம் உள்ளது.

எனவே, பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலத்தில் உள்ள மின்கம்பங்கள் மீது கட்டப்பட்ட விளம்பர தட்டிகளை அகற்ற, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி