காஞ்சிபுரம் மாநகராட்சி, வெங்கடேசபாளையத்தில், திறந்த வெளியில் மலம் கழித்தலை ஒழிக்கும் திட்டத்தின்கீழ் 4 லட்சம் ரூபாய் செலவில் பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டு, 2013ல் திறக்கப்பட்டது. அப்பகுதியினர் பொது கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், கழிப்பறையின் தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் பழுதடைந்தது.
மாநகராட்சி நிர்வாகம் மின்மோட்டாரை சீரமைக்கவில்லை. இதனால், கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கழிப்பறைக்கு பூட்டு போடப்பட்டது. லட்சகணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொது கழிப்பறை கட்டடம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
எனவே, மின்மோட்டாரை பழுது நீக்கி, கழிப்பறையை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.