டாஸ் விஷயத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, CSK அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடருக்கு பிறகு, ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா ஒருமுறை கூட டாஸ் வெல்லவில்லை. தொடர்ச்சியாக 14 முறை டாஸில் தோற்றார். அதேபோல், ருதுராஜ் கெய்க்வாட், கடந்த 14 IPL போட்டிகளில், வெறும் 3 முறை மட்டுமே டாஸ் வென்றுள்ளார். கடந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனதற்கு, ருதுராஜ் டாஸை இழந்ததுதான் காரணமென CSK ரசிகர்கள் கருதினர்.