முன்னாள் திமுக மண்டல செயலாளர் வீ.கே.குருசாமியின் ஆதரவாளராகவும், ரவுடியாகவும் வலம் வந்தவர் கிளாமர் காளி (35). பல்வேறு கொலை குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது மதுரை கீரைத்துறை, தெப்பகுளம் காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே நேற்றிரவு வெண்கலமூர்த்தி நகரில் தனது 2வது மனைவி மீனாட்சி வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் இவர் தலை சிதைத்து படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடுகின்றனர்.