5 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் இலவசமாக வழங்க தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது. அரசின் சார்பில் சொந்த வீடற்ற, நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2021-ல் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 10 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஓராண்டுக்குள் மேலும் 5 லட்சம் பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.