முதியவர்க்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம்

78பார்த்தது
காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (58) இவர் இதே பகுதியில் மாவுமில் நடத்தி வருகின்றார் கடந்த 2022 ஆம் ஆண்டு குமார் கடைக்கு இட்லி மாவு அரைக்க வந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் இதனை தொடர்ந்து நடந்த சம்பத்தை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார் இதனை தொடர்ந்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை எடுத்து கூறியுள்ளார் இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனை தொடர்ந்து இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது வழக்கை விசாரித்த செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி நசிமாபானு குற்றவாளி குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தமிழக அரசு இழப்பீடாக 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார் இதனை தொடர்ந்து குற்றவாளி குமாரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர் காஞ்சிபுரத்தில் பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி