"புத்தாண்டையொட்டி விதைப்பந்து துாவல்"

70பார்த்தது
"புத்தாண்டையொட்டி விதைப்பந்து துாவல்"
காஞ்சிபுரம், திருக்காலிமேடை தலைமையிடமாக கொண்டு, டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.


இந்த அமைப்பினர், ஆண்டுதோறும், ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தாண்டு, பொங்கல், குடியரசு, சுதந்திர தினம், தீபாவளி, முன்னாள் ஜனாதிபதி கலாம் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட தினங்களில், பொது இடங்களில் மரக்கன்று நட்டும், சாலையோரங்களில் விதைப்பந்து துாவியும் வருகின்றனர்.

அதன்படி, ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று, காஞ்சிபுரம் - ஓரிக்கை மிலிட்டரி சாலையோரத்தில், வேம்பு, புளி, நாவல், எலுமிச்சை, புங்கன் விதைகள் அடங்கிய, 100க்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை துாவினர்.

முன்னதாக திருவள்ளுவர் குருகுலம் ஆதரவற்ற மாணவர்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர்.

சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கினர். "

டேக்ஸ் :